கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்:  கு.முருகேசன்

கவிதைமணி
மொத்த உயிரணுக்களில்ஒத்த உயிரணுகருமுட்டையில் இணைவதில்தொடங்குகிறதுவாழ்க்கையேனும் போர்க்களம்!ஒன்றுமில்லாமல்பூமிக்கு வந்தவர்கள்ஒன்றுமில்லாமல்பூமிக்குள் போவதற்குள்சிலருக்குவாழ்கையில் போராட்டம்!சிலருக்குபோராட்டமே வாழ்க்கை!குழந்தைப் பருவத்தில்பொம்மையோடு போராட்டம்!பள்ளிப் பருவத்தில்பரீட்சையோடு போராட்டம்!பள்ளிப் பருவம் முடிந்த பின்பும்நீளுதிங்கே நீட்டோடு போராட்டம்!பதின்பருவ காலத்திலேகாதலோடு போராட்டம்!காதல் வேண்டாம் என்று சொன்னால்பெற்றோரோடும் போராட்டம்!குடும்ப வாழ்கையில் நுழைந்த பின்புகுழந்தைக்காக போராட்டம்!குழந்தை பிறந்த பின்தானேபடிக்க வைக்க போராட்டம்!அடித்தட்டு மக்களுக்குவயிறு நிரப்ப போராட்டம்!மேல்தட்டு மக்களுக்குவயிறு நிரம்பியதால் போராட்டம்!அரசியலில் ஆள்வோருக்குவருஷம் 365 நாளும் 356வராமல் காப்பதேபோராட்டம்!மண்ணோடும் மழையோடும்ஆறோடும் நீரோடும்தான் பட்ட கடனோடும்போராட்டம் விவசாயிக்கு!அலையாடும் கடலோடும்வலையோடும்அன்றாடம் போராட்டம்மீனவனுக்கு!எரிவாயு விலை ஏற்றத்தால்ஏழைகள் வாழ்வில் போராட்டம்!பெட்ரோல் டிசல் விலையேற்றத்தால்எல்லோர் வாழ்விலும் போராட்டம்!வாழ்கையெனும் போர்க்களத்தில்தினம் தினம் போராட்டம்!பயந்தவன் துவண்டு விழுகிறான்துணிந்தவனே துள்ளி எழுகிறான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT