கவிதைமணி

வாழ்க்கையெனும் போர்க்களம்: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

கவிதைமணி
கையில் பிடிக்கும் நொடிக்குள்ளேகாற்றாய் பறக்கும் தும்பிபோல்பொய்யாய் போகும் கனவுகளைநெஞ்சில் நிதமும்  சுமக்கின்றோம்எட்டாக் கனியென  இருந்தவைகள்எட்டிப் பிடித்திடும் தருணத்தில்தட்டிப் பறித்திடும் காலத்தால்ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்நிலையே இல்லா வாழ்வுதன்னில்நித்தமும் ஆயிரம் கோட்டைகளைகட்டிக் கொண்டே  இருக்கின்றோம்இயல்பை ஏனோ மறக்கின்றோம்காலச் சக்கரச் சுழற்சிக்குள்கடந்து செல்லும் நிகழ்வுகளின்கைதி யாகித் தவிக்கின்றோம்சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்வாழ்க்கை என்பது போர்க்களமே சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே வீழ்ச்சியும்  எழுச்சியும் தொடர்கதையாய்த் துரத்தி வருவது சத்தியமேசோதனை பலவகை வந்தாலும்தோல்விகள் துரத்தி அடித்தாலும் துவளா மனதிட மதுகொண்டால் வெற்றி என்பது சாத்தியமே !!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT