கவிதைமணி

வாழ்க்கையென்னும் போர்க்களம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி
வாழ்க்கையென்னும் போர்க்களத்தில்அனுதினமும் போராட்டம்தான்!தினம் தினமும் பூத்திடுமே புதுப்புது பிரச்சனைகள்!பதுங்கு குழிகளும் கண்ணிவெடிகளும்இங்கு தாராளம்!துணிச்சல் இருப்பவன் துணிந்து இங்கேபோராடி ஜெயிக்கின்றான்!தன்னம்பிக்கை என்னும் கதாயுதம்!தந்திடுமே என்றும் வாழ்க்கையெனும் போர்க்களத்தில்போராளிக்கு பெரும் வெற்றி!ஊக்கத்தை தொலைத்தோருக்கு என்றுமே துக்கம்தான்!தூக்கத்தை விரும்புவோருக்கு வாழ்க்கையில்என்றும் வெற்றிடம் தான்!வெற்றிகளை குவித்திட்டோர் வீண்ஜம்பம் பேசுவதில்லை!போற்றி பாடல்களை விரும்பிட்டோருக்குஏற்றம் என்றுமே நிலைப்பதில்லை!வஞ்சகம் வன்மம், பகை, சூது, பொறாமை, எரிச்சல்பொய் , களவு ,புனைச்சுருட்டு என்று பலவித ஆயுதங்கள்!போர்க்களத்தில் இத்தனையும் சமாளிக்கும்அன்பு எனும் ஒற்றை ஆயுதம்!வாழ்க்கை எனும் போர்க்களத்தில் அன்பும் நம்பிக்கையும்நம்மோடிருப்பின் நலமோடிருப்போம்!நம் கையில் வாழ்க்கை வீழ்ந்திருக்கநல் வாழ்க்கை பாடத்தை கற்பித்திருப்போம்!வாழ்க்கையெனும் போர்க்களத்தைநம்பிக்கையோடு எதிர்கொள்வோம்!  வாழ்க்கைதரும் பாடங்களைவழிவழியே கற்றிடவே எதிர்காலம் எதிரிகள் இல்லா காலமாகும்இனிதாக பூத்திடும் போர்க்களத்தில்இன்பம் தரும் வெற்றி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT