"வெல்லும் சொல்" யாதெனில் யாருக்கும்
முள்ளென்று தைக்காத சொல் !
"வெல்லும் சொல்" யாதெனில் உத்வேகம்
உள்ளோடு ஊட்டும் சொல் !
"வெல்லும் சொல்" யாதெனில் கசடில்லா
நல்லோர்கள் சொல்லும் சொல் !
எதிர்மறை இல்லாத நன்சொல்லே வென்றிடுமாம்
புதிரில்லை புரிந்த பேர்க்கு !
"பெருமுயற்சி","பேருழைப்பு" என்பனவே வெற்றிக்கு
இருபடியாய் அமைகின்ற அருஞ்சொல்லாம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.