வெல்லும் சொல்; சரஸ்வதி ராசேந்திரன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 7:05 PM
ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும்
கெட்ட சொல்லோ
குழிபறிக்கும்
குப்புறத் தள்ளும்
பதை பதைக்க வைக்கும்
வதைக்கும் வலி கொடுக்கும்
நல்லசொல்லோ
உற்சாகம்தரும்
உத்வேகம் கொடுக்கும்
வாழ்வில் வெற்றியை கொடுக்கும்
சிகரம் ஏற்றும் மற்றவருக்குத்
Advertisement
தொல்லைத்தராத
நல்ல சொல்லே
வெல்லும் சொல்
வெல்லும் சொல்லிருக்க
கொல்லும் சொல் எதற்கு
கொச்சை சொற்கள் எல்லாம்
இச்சை சொல்லாக்கொள்பவரே அதிகம்
சொல் சுகமானால் சுனாமி இல்லை
சொல் சூடானால் பூமியில் வெப்பம் கூடும்
கனியிருக்க காய் வேண்டாமே