கவிதைமணி

வெல்லும் சொல்: பெருவை பார்த்தசாரதி

கவிதைமணி
வெல்லும் சொல்கொண்ட வார்த்தையை வைத்து     வியக்கின்ற வகையிலே கவிதை புனைபவருளர்.!சொல்வீச்சால் பார்வையாளரைச் சொக்க வைத்துச்    சிந்தனையைச் சிறை வைக்கும் சொற்பெருக்கருளர்.!இல்பொருளில் எதையோ பேசிநம்மை எழவிடாமல்    இருக்கை யிலமரச்செயும் வித்தை தெரிந்தவருமுளர்.!எல்லாமும் அறிந்த எத்தனையோ அறிஞர்களை    ஈந்ததுதான் பெருமையெந்தன் தாய் நாட்டுக்கேயாம்.!சொல்லாடல் தெரிந்ததால்தான் இன்றும் கம்பனும்    வள்ளுவனும் இளங்கோவும் வாழ்கிறான் என்றுமே.!சொல்லுக்கு வித்தகனாம் மஹாகவி பாரதியும்தன்    சொல்வன்மையால் சுதந்திர தாகமெழச் செய்தான்.!நெல்மணிகளைத் தாங்கி நெற்கதிர் தாழ்வதுபோல்    நல்லதைத் தாழ்பணிந்துச் சொன்னாள் ஒளவையும்,!நல்லகாலம் பிறப்பதற்கு நாம்வழுவ வேண்டியதை    நாலடியிலடக்கியது நாலடியாரின் வெல்லும் சொல்.!வெல்லும் வாள்வீச்சுக்கு இணையாம்..சொல்லுமே    வள்ளுவன் சொல்வன்மை உலகையே யாள்கிறது.!வல்லமைச் சொற்றொடரால் எழுந்த காப்பியமே    வலிமை கொண்ட மாபாரதமும் இராமாயணமும்.!வில்லாளனின் சரமழைபோல் வெல்லும் சொல்லால்   விழுந்து வாக்கியமாகியது வீழாதின்றும் வாழ்கிறது.!சொல்லாட்சி மிக்க தமிழிலக்கியங்கள் தருமின்பம்   சுரங்கம்போல் தோண்டத் தோண்டக் கிடைக்கும்.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

1085 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்யும் தெலங்கானா அரசு!

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

SCROLL FOR NEXT