கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்:  ரா.பார்த்தசாரதி 

கவிதைமணி
பழைய  தலைமுறை பண்புகளை கைக்கொண்டோமா இன்றைய தலைமுறைப் பண்புகளை  மேற்கொண்டோமா தலைமுறைகள்  மாறினாலும் நமது பண்புகள் மாறுவதில்லை தலைமுறைகள் விட்டுசென்றதை மனித மனங்கள் ஏற்பதில்லை !வாழ்க்கை என்றும் ஒரு எந்திரியமயமாக கருதப்படுதே நிற்பதற்கும், பேசுவதற்கும் நேரம் இல்லமால் போனதே பாவ புண்ணியங்களுக்கு சற்றே பயந்து  நடப்போம் வரும்  தலைமுறைக்கு புண்ணியத்தை அளிப்போம் !பசுவும், தன் பாலை  மிச்சம் வைத்து தன் குட்டிகளை காப்பாற்றும்அதனிடம் கருணை காட்டாது  தன் பசிக்காக அதனை கொல்வோம் ஆடு,மாடுகள் உண்ட  மிச்சமே பூமிக்கு சத்துள்ள எருவாகிறது மனிதனின் மிச்சமோ மனிதனே தீண்டத்தக்கதாக அமைகிறது !மனிதன் பல இனங்களானாலும் அவன் குருதி செந்நிறமே பணத்தாலும் ,அறிவாலும் மனித இனமும் வேறுபட்டு நிற்குமே ஏழை, பணக்கார ஜாதி என்றும்  தலை தூக்கி  நிற்குமே பணக்காரர்கள் போட்ட  மிச்சத்தை உண்டுவாழும் ஏழை இனமே !ஏழை கடைசி வரை ஏழையாகவே வாழ்ந்து  இறக்கின்றான் தன் ஏழ்மையை  என்றும் தானமாக விட்டு செல்கின்றான் பணக்காரனோ மேன்மேலும் தன் தலைமுறைக்குச் சேருகிறது மடுவிற்கும், மலைக்கும் உள்ள இடைவெளியே உதாரணமாகிறது !ஒருவன் நல்ல நிலையில் இருந்தால், முன்னோர் செய்த புண்ணியமா ஏழையாய்  இருப்பதும் முன்னோர் செய்த தீமையான காரியமா வள்ளுவன் சொன்ன எச்சத்தாரால் மிச்சத்தை மீட்க முடியுமா விட்டுச் சென்றதை நடுநிலைமை கொண்டுதான் தீர்க்கமுடியுமா !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT