கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: ஜெயா வெங்கட்

கவிதைமணி
புலரும்   பொழுதோ   புகையில் புதையமலரும் மனிதவாழ்வோ கருவில் கருக தொடர்கிறது இங்கே தொழில்நுட்ப புரட்சி தொலைந்து போனதே இயற்கையின் மலர்ச்சி !காண்பது எல்லாம் கான்கிரீட் காடுகள் காணாமல் போனவை  பசுமைக் காடுகள்விதைக்கும் விதைக்கும்கூட  கையேந்தும் விதியாக  மாறிப்போன    கையறுநிலை !சுகம்என நினைக்கும் இன்றைய தேவைகள் சுமையாகிப் போகுமோ நாளைய தலைமுறைக்கு !அச்சத்தில் வாழ்வதை விடுத்து  இனி மிச்சமிருக்கும் இயற்கையை மீட்டெடுப்போம் வாரீர் !மலையும் மடுவும்    நிலைக்க வேண்டிமரமும் செடியும்  வளர்த்திடுவோம் !மண்ணின் தன்மை காக்க வேண்டி மக்காத   நெகிழிகளைத் தவிர்த்திடுவோம் !புவிவெப்பமும் மாசும் குறைய வேண்டிபுகைவிடும் வண்டிகளுக்குத் தடையிடுவோம் !புல்லும் பூவும் மலர வேண்டி பூமியில் பசுமையான விரித்திடுவோம் !நஞ்சாகிப்போன பஞ்சபூதங்களைக் காத்து எஞ்சியுள்ள மனித குலத்தை தழைக்கச்செய்வோம் !வளமையான   சுற்றுச்சூழலே உலகில் வலிமையான சந்ததியரை உருவாக்கும் என்பதால் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT