கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

கவிதைமணி
உச்சத்தில் இருக்கிறது சூரியன்!பச்சை பசுமைகள் அழிந்து கொண்டிருக்கிறது!கிராமங்களில் கூட விவசாயம்பிராணனை மெதுவாகவிட்டுக்கொண்டிருக்கிறது!ஒங்கி உயர்ந்து நின்ற மலைச்சிகரங்கள்தூங்கி விழிக்கையில் தூசாக மாறிக்கொண்டிருக்கிறது!கேணிகளுக்கு சமாதி கட்டியாகிவிட்டது!கோணிகளில் விற்ற அரிசிநெகிழிகளில் அடைபட்டு மூச்சிறைக்கிறது!சாலைகள் விரிகையில் சடுதியில் காணாமல்போகிறதுசோலைகள் நிறைந்த கிராமங்கள்!உடலிழந்து ஓடும் திராணியற்று ஒளிந்து,மறைந்து கொண்டிருக்கின்றன ஆறுகள்!ஆழியின் அடியிலும் கூட நெகிழி குப்பைகள்!நிலம் கெட்டு நீர் கெட்டு  உணவுகெட்டுஉடல் கெட்டு உறுதி கெட்டு ஊர் கெட்டுஉடைபட்டுக்கிடக்கின்றது  சூழல்!முக்கால்விழுக்காட்டை விழுங்கி ஏப்பம் விட்டபின்னும்முழுதினும் அடங்கவில்லை பசி!கால்விழுக்காடு மிச்சமிருக்கிறது!உச்ச வெப்பத்தை தணித்து வைக்கஉலக அழிவை தள்ளி வைக்க உடனேமிச்சத்தை மீட்போம்! இயற்கையை வளர்ப்போம்!செயற்கையை வேரறுப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT