முகப்பு
கவிதைமணி

ஒருமுறையேனும்: கவிஞர் ராம்க்ருஷ்

Updated On : 25 ஜூன், 2018 at 2:53 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
உரசும் ஊழல் சேற்றிலிருந்து விலகிஅரசியல் தருமத்தை மறக்காது பழகிசிரசு முதல் கால்வரை அன்பில் நனையும்முரசு ஒலி ஒருமுறையேனும் கேட்பேனோசாதாரணப் பணியும் லஞ்சத்தில் நடக்கும்ஆதாரம் கேட்டு அலைய வைக்கும் என்றும்சேதாரமில்லாது செயல்கள் நடக்கும் அந்தமாறாத நிலை ஒருமுறையேனும் வருமாஆதி மனிதன் நாகரிகமில்லாதிருந்தாலும்சாதி மதம் என உருவாக்கி சதிராடியதில்லைமோதிக் கொண்டது உணவுக்காக மட்டுமேநாதியற்ற இழிவு ஒருமுறையேனும் நீங்குமாஓடியோடி உழைத்த நிலை இன்றில்லைஆடிப்பாடி மிகுந்திடும் நேரமே உழைப்பானதுகூடிப்பேசி ஒன்றாகி உழைத்து உயர்வதெனவாடிப்போகா நிலை ஒருமுறையேனும் வருககண்டதே காதல் கொண்டதே கோலம் என்றாகிஅண்டம் முழுதும் பாலியல் வேட்கையில் மகிழஉண்டான ஆணாதிக்கப் போக்கு எங்குமாகிநண்டாகி நாசமாகாது ஒருமுறையேனும் செல்கசேவை மனிதகுல மாயை என ஒதுங்கி நின்றுதேவை காப்பாற்றும் ஆளென வீண்பேச்சு பேசிஆமை போல் அசைந்தாடி ஒத்துழையாதுதீமை செய்யாது ஒருமுறையேனும் இருந்திடுக,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.