ஒருமுறையேனும்: கே.ஆர். கார்த்திகா
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:33 PM
ஒருமுறைதான் பிறப்பு
பெற்றோர் தரும் உயிர்
ஒருமுறைதான் இறப்பு
நாம் செய்யும் தவம்
இடைப்பட்டவையெல்லாம்
இயற்கை கொடுத்தருளிய வரம் . . .
சொன்னாலும் சொல்லாவிடினும்
வாழ்க்கை ஒருமுறைதான். . .
வாழ்ந்துதான் காட்ட வேண்டும்
இறப்பும் ஒருமுறைதான்
இறந்துகாட்டமுடியாது
இறப்பையும் வாழ்ந்து காட்டியே
நிரூபிக்கவேண்டியதிருக்கு . . .
ஒரு முறையேனும் கிடைத்ததே
இந்த அற்புத வாழ்க்கை நமக்கு. . .