கவிதைமணி

ஒருமுறையேனும்: கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

கவிதைமணி
சொல்லுகின்ற சொற்களெல்லாம் சுடுமே என்று   சிந்தனையில் சிறிதேனும் நினைத்தல் உண்டோஅள்ளவேண்டும் பொருளென்று எண்ணும் போதே   அதுவெல்லாம் பொதுவுடமை கணக்கில் உண்டாமெல்லமனம் சொல்லுகின்ற நீதி எல்லாம்   மௌனத்தால் கனிந்திருந்து நினைத்தல் உண்டோஎல்லையின்றி உழைப்பவர்கள் உதிரம் எல்லாம்   உன்செல்வம் என்றுணரும் எண்ணம் உண்டாஉனக்கெனவே சுயநலமாய் பாதை கண்டாய்   உழைக்கின்ற எளியோரை அடிமை என்றாய்கணக்கில்லா துன்பத்தைக் கண்ணால் கண்டும்   கருணையில்லா செயல்காட்டி கடிந்து நின்றாய்மனத்துள்ளே ஓர்நாளும் இரக்கம் இன்றி   மதியில்லா கீழ்பிறப்பாய் நடந்து கொண்டாய்குணங்காட்டி என்றேனும் இசைவாய்ப் பேசி   குளிர்கின்ற ஓர்பார்வை பார்த்த துண்டா ?வருந்துன்பம் வறியவர்க்கா ? நமக்கே என்று   வலிந்துதவும் சிந்தனையை மனதால் நாடுமருளென்ற இருள்நீங்கப் பரிவாய்ப் பேசி   மனமெல்லாம் அருளாகி நேசம் காட்டுதருகின்ற கைதானே தாயின் கைகள்   தணிந்தருள பயந்தோடும் வறுமைப் பேய்கள்இருள்சூழ்ந்த ஏழையரின் இன்னல் தீர   “இதயமொரு முறையேனும் துடித்தல்” வேண்டும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT