கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் இளவல் ஹரிஹரன்

கவிதைமணி
பாதியிலே சொல்மறந்த கவிதை போல      பணமிங்கு திடீரெனச்செல் லாதல் போலநீதிமன்ற இழுபறியில் தொலைதல் போல      நிறைமதியோர் செயலற்றி ருத்தல் போலவாதிடுவோர் நினைவிழக்கும் தன்மை போல      வழக்கினிலே சாட்சியங்கள் பிறழ்தல் போலநாதியற்றுக் கருவினிலே சிதைவு கண்டே     நலமிழந்து தொலைகின்ற குழந்தை அய்யோ!ஊன்சுமந்த உயிர்சுமந்த கருவ றைக்குள்     உள்ளபெரு மிருள்மூழ்கி வளர்வ தற்குள்தான்சுமந்த கருவினிலே தொலைந்து போன     தவங்கிடந்த குழந்தையினை என்னென் பேன்நான்?வான்தொலைந்து போனதுவோ வண்ண மின்றி     வளர்காமம் உருவாக்கித் தந்த தென்றுதேன்மலரும் மலருமுன்னே உதிர்தல் போலத்     திருவாகும் முன்கருவில் தொலைந்த தன்றோ!யார்குற்றம் பெற்றெடுக்கும் துணிவு மின்றி     அயலாரின் அவலச்சொல் தவிர்க்க எண்ணிஓர்உயிராய் கருவுக்குள் வளர்ந்த அந்த     உன்னதமாம் குழந்தையினைத் தொலைத்தல் நன்றோ!பேர்சுமக்கும் பெண்குழந்தை என்று கண்டால்     பெறும்கருவில் துவக்கத்தில் அழிப்ப தற்கு யார்முனைந்த போதுமவர் எதிரி யாவார்.     ஆதரவாய்க் தொலைக்காமற் கருகாப் போமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

SCROLL FOR NEXT