கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: கவிஞர் டாக்டர். இராஜலட்சுமி இராகுல்

கவிதைமணி

"அந்த மூன்று நாட்கள்"
வந்திடத் தவறிய
 நாள் முதல் ....
ஆணோ ? பெண்ணோ?
அழகதன்  உருவோ    
கறுப்போ? சிகப்போ?
கார்வண்ணன் நிறமோ ..

என்னைப் போலப்   பிறக்குமோ ?
"அவர்"- ஐப் போல இருக்குமோ ?

இருவருடைய  சாயலையும் ...
இணைத்துக்கொண்டு உதிக்குமோ??

அத்தை போல சிரிக்குமோ?
மாமன் போல முறைக்குமோ ?
சித்தி போல சிணுங்குமோ ?
தத்தை போல மொழியுமோ ?

என்று ஆசைப் பைஞ்சுதை மேல்
அன்புமனக் கற்களினால்
ஆகயாக் கோட்டையொன்றை
ஆவலுடன் கட்டி வைக்க…

என் உயிர்நிலையின் வாயிலாக
உயிரே..
ஓர்நாள்..
உனைப் பற்றிய
கனவுகள் அத்தனையும் 
உதிரமாக வழிந்தத (டி/ டா ) !!!!

மாளாத்துய ரென்று
மண்ணினிலே எதுவுமில்லை !!!
தீராக்கதை யொன்றை
தரணி யதும் கேட்டதில்லை!!!

ஆதலால்
"அம்மா" என்றழைத்து எந்தன்
"பெண்மை" யதை  நிறைவு செய்யப்
போன பாதை வழி யென்னிடம்
அதிவிரைவில் திரும்புவா யென்றென்
அடி வயிற்றின் மீதினிலே விழிவைத்துக் 
காத்துக் கிடக்கின்றேன்…..
மீண்டும்,
"அந்த மூன்று நாட்கள்"
வந்திதத் தவறிடும் நாளது  
வரும் வரையில் !!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT