கவிதைமணி

யார் இட்ட சாபம்: ஆர்.வித்யா

கவிதைமணி
மரம் வளர்த்தால் மழை பெறலாம் எல்லா மரத்தையும் வெட்டுவோம்- மழைக்கு இறைவனை வேண்டுவோம்.‘மணலைத்தோண்டினால் நீர் சுரக்கும்; மணலை சுரண்டினால் நீர் காணாது போகும்’அறிந்தபோதும் மணல்குவாரிக்கு மங்கலம் இசைப்போம்!‘புவியீர்ப்பைத் தாண்டினால் புது உலகம் கிட்டும்’புரிந்தபோதும் ஏவுகணை செய்து பக்கத்து நாட்டையே அழிப்போம்!அறிவால் அணுவைப்பிளந்து ஆராய்வோம்-பிளந்த அணுவால் பூவுலகை ஒழிப்போம்!அசல் சினிமாவையே கலையாக அறிவோம்ஆனபோதும் அரைகுறை சினிமாவையே கலையாக ரசிப்போம்.‘எது கலை’- ‘எது இலக்கியம்’ என்பது உறுதியாக தெரியும்அதற்கும் ஒதுக்கீடு செய்து கலையை களையாக்குவோம்?!‘நல்ல தொண்டனே நல்ல தலைவன்’ ஆயிரம் ஆண்டுக்கு முன்பே அறிவு பெற்றோம்அறிவைப்பெற்றும் ‘நேரடி’ தலைவனாகவே கனவு காண்போம்!‘தாவர உணவே தலை சிறந்தது’ஆனபோதும் உயிர்க்கொன்றே உடல் வளர்ப்போம்.மாற்று அறுவை சிகிச்சையில் மகத்துவம் நிகழ்த்துவோம் ;ஆறுரூபாய் குறைந்தாலும் ஆபரேஷனை நிறுத்துவோம்!சூரியனை இரவில் வெளிச்சம் தரும் சக்தியாக்குவோம் ;ஆனபோதும் வெளிச்சத்திலும் ‘இருட்டு’ வாழ்க்கை வாழ்வோம்.‘நமக்குள்ளே போனால் ஞானம் கிட்டும்’அறிவால் அடைந்த ஞானத்தையும் ‘நான்’ எனும் அகந்தையால் அழித்தோம்.மகத்தான அறிவும் பெற்று மடத்தனமாய் வாழும் வாழ்வு‘யார் இட்ட சாபம்?’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT