கவிதைமணி

யார் இட்ட சாபம்: தா. ஹெலன் பிரபாகரன்

கவிதைமணி
பிறக்கும் பொழுதே அழுகை!    அன்பால் அணைக்கும் தாய்!கண்டிப்பால் நல்வழிப்படுத்தும் தந்தை!       தோழன், தோழி போல தம்பி தங்கை!என பிறந்தவீட்டில் வாழ்ந்திட்ட பெண்ணுக்கு,     நல்லதோர் வாழ்க்கைத்துணை அமையவில்லையெனில்புகுந்தவீடு நரகமே! – அவ்வண்ணமே      நல்ல வாழ்கைத்துணை அமைந்தாலும்,குழந்தை பாக்கியம் இல்லையெனில்     தூற்றித் துன்புறுத்தும் உறவுகள்!குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்து, அக்குழந்தையும்     பெண்ணாயிருந்தால் கேலி செய்யும் பந்தங்கள்!அமைதியாக இருந்தாலும் ‘ஊமை, ஒன்றுமறியாதவள்’       என்று பரிதபிக்கும் சுற்றங்கள்!எதிர்த்து குரல்கொடுத்தாலும் ‘வாயாடி, அடங்காதவள்’       என பட்டம் சூட்டும் சமுதாயம்!தொன்றுதொட்டே ‘என்ன வாழ்க்கை இது?’       என்று சோர்ந்து துவளும் அளவிற்கு,பெண் வாழ்க்கை இருப்பது…        யார் இட்ட சாபமோ??? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT