யார் இட்ட சாபம்
ஏன் இந்த கோலம்
மனிதம் இல்லாத மனிதர்கள்
விதியின் பெயரைச்சொல்லி
சதி செய்யும் சாபக்கேடுகள்
தமிழனின் உரிமைகள்
பறி போகிற ஆத்திரம்
தண்ணீருக்குக் கூட கையேந்துகிற விசித்திரம்
மண்ணின் மைந்தர்கள்
தொன்மையான மொழியின்
தவப்புதல்வர்கள்
கெஞ்சும் நிலை இன்று
யார் இட்ட சாபமோ
ஏன் இந்த கோலமோ
வீரமறவர்கள் கூட்டம் இனி
வீழ்ந்து போகக்கூடாது
சரித்திர நாயகர்கள்
சாய்ந்து விடக்கூடாது.....
தலை நிமிர்ந்து நில்
தடுப்பதை தகர்த்தெறி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.