கவிதைமணி

யார் இட்ட சாபம்: ரெத்தின.ஆத்மநாதன்

கவிதைமணி
யாரிட்ட  சாப  மிது   யாரறிவாரோ?எவர்க்கு  மிங்கு அமைதியில்லை ஏனதுதானோ?புத்தர் காந்தி நேருவென்று புகழிங்குண்டுபோனதுவே அத்தனையும் காற்றி லினின்று!தர்க்குரிகள் பலபேரின்று தலைவர் களானார்தன்குடும்பம் தன்னுறவை வளர்த்தே விட்டார்!மக்களிங்கு சொந்த நாட்டில் அகதிகளானார்மதிப்பிழந்து மனமொடிந்து மகிழ் விழந்தாரே!காட்டுமரம் ஆற்றுமணல் கடற்கரை மண்ணையும்காசாக்கிக்  கூட்ட  மொன்று  களிப்பாயிருக்கு!வாட்டுகின்ற   பசியினையும்   தாங்கிய   படிவறுமையிலே உழைக்கிதிங்கே ஒருசிறு கூட்டம்!படத்தினிலும் பாட்டினிலும் முகங் காட்டியேபடுஜோராய் வாழுதிங்கே மற்றொரு கூட்டம்!அரசு பெயர் சொல்லியபடி வேறொரு கூட்டம்அடிக்கு திங்கே லஞ்சங்களைக் கோடிகளாய்!கோயில் குளம் கொஞ்சுகின்ற ஆறுகளென்று குறைவின்றிச் செய்து வைத்தார் அரசர்களன்று!இருந்ததையும் கோட்டை விட்டே யாவருமின்றுஏழ்மையிலே உழல்கின்றார் இனிமையை விட்டு!நம்பியே    வாக்களித்த    மக்களை    யிங்கு நட்டாற்றில் விட்டு விட்டார் நயவஞ்சகர்களின்று!யாரிட்ட  சாப  மிது   யாரறிவாரோ?எவர்க்கு  மிங்கு அமைதியில்லை ஏனதுதானோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT