யார் இட்ட சாபம்: சர்வோ சீனிவாசன்
தரணி எங்கும் தண்ணீர் காட்டாற்று வெள்ளமாய்
தமிழ் நாட்டுக்கு மட்டும் ஏனிந்த பஞ்சமோ ?
முப்போக சாகுபடி கண்ட தமிழ்நாட்டிற்க்கு
யாரிட்ட சாபமோ ?
ஏழு பத்து ஆண்டாய் தவிக்கிறோம்
ஏன்னு கேக்க நாதியில்லை
யாரிட்ட சாபமோ?
திராவிடன் என கூவி கூவி
அறுபத்து ஏழில் அரியணை பிடித்தது
யார் இட்ட சாபமோ ?
அள்ளி குடிக்க இலவசமாய் கிடைச்ச தண்ணி
குப்பியிலே அடைச்சு காசுக்கு விக்கிறாங்க
யார் இட்ட சாபமோ ?
Advertisement
பருவத்து மழையும் பொய்த்து போகுது
தமிழ் நாட்டுக்கு மட்டும்
யார் இட்ட சாபமோ ?
அதிசயமாய் கொட்டி தீர்க்கும்
ஆனால் அதை அப்படியே
வங்க கடலில் கலக்கவிடுவோம்
இதுவும் யார் இட்ட சாபமோ ?
வரி பணத்தை வாரி இறைப்பாங்க
அணைகள் எதுவும் கட்டமாட்டாங்க
யாரிட்ட சாபமோ ?
காவிரியில் தண்ணி கேட்டு கையேந்துவாங்க
மானமில்லா வீர தமிழனுங்க
இதுவும் யாரிட்டசாபமோ ?