5 கிலோ சிலிண்டர் விலை உயர்வு! பாதிப்படையும் சிறு, குறு வியாபாரிகள்!
5 கிலோ சிறிய வகை சிலிண்டர்களின் விலை உயர்வு குறித்து...
மினி சிலிண்டர்களான 5 கிலோ சிலிண்டர்களின் விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளில் எண்ணெய்த் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
சர்வதேச எண்ணெய்த் தட்டுப்பாடுக்கு மத்தியில் இந்தியாவில் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்ட நிலையில், 5 கிலோ சிலிண்டர்களின் விலையும் ரூ. 261 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வகை சிலிண்டர்களை தெருவோரங்களில் சோளம், வடை, பானிபூரி உள்ளிட்ட உணவு வகைகள் விற்பவர்களும் தள்ளுவண்டிகளில் உணவகங்கள் நடத்துவோரும் பயன்படுத்துவது மட்டுமின்றி, குறுகிய காலத் தேவை மற்றும் அவசரப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
5 கிலோ சிலிண்டர் மீதான இந்தத் திடீர் விலை உயர்வும் கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
மேலும், வணிகப் பயன்பாட்டுக்கான (19 கிலோ) சிலிண்டரின் விலை ரூ. 993 உயர்ந்து, ரூ. 3,237-க்கு விற்பனையாகிறது. இந்த அதிரடி விலை உயர்வால் ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால் உணவுப் பொருள்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் எந்த உயர்வும் இல்லை.