FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தொடர்ந்து உயரும் முட்டை விலை! ஆம்லெட் பிரியர்கள் வருத்தம்!

இன்றைய முட்டை விலை நிலவரம் குறித்து...

Updated On : 15 ஜூலை 2026, 6:17 pm IST
முட்டை விலை - பிரதிப் படம்
பகிர்:

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 6.80-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கோழிப் பண்ணையாளர்களிடம் முட்டை விலையில் மாற்றம் செய்வது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது.

அப்போது, முட்டை உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை உயர்வு, வாகனங்களுக்கான வாடகை கட்டணம் உயர்வு, மற்ற மண்டலங்களில் விலை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யலாம் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 6.80-ஆக தேசிய ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சில்லறை விலையில் ஒரு முட்டையின் விலை ரூ. 8 முதல் ரூ. 8.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் உணவகங்களில் ஆம்லேட், கலக்கி போன்ற முட்டையைக் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளதால், இதனை விரும்பி சாப்பிடுவோர் வருத்தத்தில் உள்ளனர்.

The egg price in the Namakkal zone was fixed at Rs. 6.80, following an increase of 5 paise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments