முகப்பு
கவிதைமணி

யார் இட்ட சாபம்: பெருமழை விஜய்

Updated On : 21 மே, 2018 at 3:53 PM
பகிர்:
யாரிட்ட சாபமிது இந்தியா வுக்குஏனிந்த உலுத்துப்போன சட்ட திட்டம்?காசை இறைத்தால்தான் கவினாட்சி தமக்கென்றுகட்சிகள் அத்தனையும் கச்சை கட்டுவதேன்?சட்டசபை  எண்ணிக்கையில்  சரி  பாதிபெற்றோரேஅரசமைக்க உரியரென ஆளுநரும் அறியாரா?கவர்னரே நாட்டில் கழுதை* பேரத்தைஏற்படுத்த முனைவது எந்தவிதத்தில் நியாயம்?ஆட்சியைத் தக்கவைக்க அதிகார துஷ்பிரயோகம்செய்யாத கட்சிகள்தானே சிறப்பான கட்சிகள்?அத்தகைய கட்சிகளை அகில இந்தியாவிலும்இனியென்று காண்போமென்று ஏங்குது இளமனசு!திருமங்கலம் பார்முலா திகட்டாமல் நாடெங்கும்மெல்லப் பரவிடவே மெலிதாய்ச் சாகிறதுஜனநாயகம்!சட்டங்கள் இங்கு சாமானியர்களை வதைத்தெடுக்கஅதிகார வர்க்கத்துக்கோ அதுவே காப்பாகிறது!யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சமென்றுகண்ணதாசன் பாடியது கச்சிதமாய் நடந்ததின்று!மன்றங்களில் நீதியின்று மடியுந் தருவாயில்மக்களோ அமைதிதேடி மலையேறப் போகின்றார்!ஆயிரங்களுக்கே இங்கே அடிவர்க்கம் அலைகையிலேஆயிரங்கோடிகளில் லஞ்சம் ஆலவட்டம் போடுதையோபிறக்கும்போதே மருத்துவமனையில் பேர்சொல்லும் ஊழல்இறந்த பின்னே போய்ச்சேரும் இடுகாட்டிலும் ஊழல்!பாலிலும் ஊழல் மாட்டின் பசுந்தீவனத்திலும் ஊழல்அலுவலகங்கள் அனைத்திலுமே அடிமட்ட ஊழல்!யாரிட்ட சாபமிது இந்தியா வுக்குஏனிந்த உலுத்துப்போன சட்ட திட்டம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.