கவிதைமணி

யார் இட்ட சாபம்: அழகூர். அருண். ஞானசேகரன்

கவிதைமணி
யார்யிட்ட சாபத்தால் பண்பில்லா மோடியவன்               இன்னாட்டை ஆளவந்தான்;      ஏற்றுமதி சரிந்ததே தொடர்ந்துமூன் றாண்டாக               என்னபதில் தனைசொல்லுவான்?பார்யிதனை ஆளவரும் வேந்தற்கு சிறிதேனும்               பண்புகள் வேண்டும்தானே,      பண்பற்றத் தலைவனால் நேர்ந்திடும் அவலமதைப்               பார்ப்பதும் கொடுமைதானே!கூர்கெட்ட மதியாளன் நாடாளும் வரைதன்னில்               கொடுமைகள் தொடர்ந்திடாதோ;       குறையாதோ வளங்களும் புகழதும் பெருமையும்                கொடுமையிதைப் பொறுக்கத்தகுமோ?சீர்மிக்க அறிஞரென் றாகாத போதினில்               சிறப்பாக ஆளத்தகுமோ?       சிந்தித்து வாக்குதனை நாமிடாப் போதினில்               சிறப்புதனைக் காணத்தகுமோ?பணத்தாள் மதிப்பிழக்க பாழ்பட்டது தொழிலும்        பாண்டித்யம் இல்லாரின் பண்பற்ற செயலால்!கணக்கெலாம் தவறாச்சு காணபவர் நகைக்க        காலமிதை மறக்காது கருத்திலிதைக் கொள்க!சுணக்கமின்றி உலகமதை சுற்றிவரும் மோடி       சுழியமதைப் பலனாக பெற்றதே உண்மை!இணக்கமற்ற செயலாலே இழிவேதான் பலனாம்,       யாரிட்ட சாபமதால் இவனாட்சி பெற்றோம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

SCROLL FOR NEXT