வாசகர் கடிதம்
தங்களின் கவிதைமணி இணைய தொடரில் எனது கவிதையை இடம் பெறச் செய்தமைக்கு நன்றி
பிரிவின் முடிவில் சொல்லும் வார்த்தை
மீண்டும் சந்திப்போம் !
நம்பிக்கை அது ...எதுவும் நம் கையில்
இல்லா விட்டாலும் !
பள்ளி வாழ்க்கை ...கல்லூரி வாழ்க்கை
பிரிந்தோம் அன்று!
மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன் !
நம்பிக்கையும் பொய்ப்பதில்லை சில நேரம் !
மீண்டும் சந்தித்தோம் நாம் மலரும் நினைவுகளுடன் !
பொன் விழா சந்திப்பு ஒரு நல்ல ஆரம்பமே
மீண்டும் சந்திப்போம் என்று சொல்லித்தானே
விடை பெற்றோம் அன்றும் !
சிந்திப்போமா எங்கே எப்படி மீண்டும்
சந்திப்பு என்று !
மீண்டும் சந்திப்போம் விரைவில் !
- கந்தசாமி நடராஜன்
**
Advertisement
Advertisement
காதணியில்லா பெண்மணியா
கவிதையில்லா தினமணியா
இல்லாதபோதுதான்
பற்பலவற்றின் அருமை புரியும் !!
அந்த வகையில் இப்போது கவிதைமணி !!
விரைவில் வரும் என்கின்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கின்றேன்
கவிதைகளை வாசிக்க
- ஆர்.வித்யா, பண்ருட்டி
**
தங்களின் கவிதைமணி இணைய தொடரில் எனது கவிதையை இடம் பெறச் செய்தமைக்கு நன்றி, மேலும் எங்களை போன்ற வளரும் கவிஞர்களுக்கு இந்த தொடர் மிகவும் பயணுள்தாக அமைந்தது, கவிதைமணி தொடர் விரைவில் புதுப் பொலிவுடன் வர நான் காத்திருக்கிறேன். விரைவில் கவிதைமணி இணைய தொடரை தொடங்குங்கள்.
- ரகுநந்தன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.