மீண்டும் வருவாயா..?
கொஞ்சும் தமிழில் கவியெழவே……………கவிதைக் காதல் தந்தாயே..!
கொஞ்சும் தமிழில் கவியெழவே
……………கவிதைக் காதல் தந்தாயே..!
பிஞ்சுக் குழந்தை அழும்படியே
Advertisement
Advertisement
……………பிரிந்து சென்றாய் எங்கேயோ..?
தஞ்சம் என்றே வந்தவரைத்
……………தவிக்க விட்டுச் சென்றாயோ..!
நெஞ்சைத் தொட்டக் கவிதைமணி
……………நீண்ட நாளாய்க் காணோமே..?
.
தன்னை மறந்து பாட்டெழுத
……………தமிழில் தலைப்பும் கொடுத்தாயே..!
தென்றல் கவிதைத் தினம்தினமே
……………தந்து விட்டுச் சென்றாயே..!
என்போல் பலரும் ஏங்குகின்றார்
……………எப்போ மீண்டும் வருவாயோ..?
மன்னன் மகுடம் கவிதைமணி
……………மீண்டும் சிரம்மேல் சூடுவாயா..!
- கவிஞர் பெருவை பார்த்தசாரதி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.