நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 8

உங்களை எங்கே நெருங்குவது, எப்படி நெருங்குவது, அதற்கான வழி என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை.

சூர்யா

அருகும் சுவடும் தெரிவுஉணரோம், அன்பே
பெருகும் மிக
, இது என்? பேசீர், பருகலாம்
பண்புஉடையீர்
! பார்அளந்தீர்! பாவியேம் கண் காண்புஅரிய
நுண்புஉடையீர் நும்மை நுமக்கு
.

எம்பெருமானே, அள்ளிப் பருகுவதற்கு ஏற்ற நற்குணங்களைக் கொண்டவரே, இவ்வுலகை அளந்தவரே, எங்களைப்போன்ற பாவிகளுடைய கண்களில் தென்படாத அளவு நுட்பமானவரே,

உங்களை எங்கே நெருங்குவது, எப்படி நெருங்குவது, அதற்கான வழி என்ன என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், உங்களை நினைத்தாலே போதும், உங்களை நெருங்கிவிட்டதுபோல் மனத்தில் அன்பு மிகுதியாகப் பெருகுகிறது. அது எப்படி? சொல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT