நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 12

எம்பிரானை வணங்கு என்று நான் உனக்கு உபதேசம் சொன்னாலும், நீ கோபித்து அதைப் பின்பற்றுவதில்லை,

சூர்யா

நீஅன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுஉழன்றாய்?
போய் ஒன்று சொல்லிஎன்? போநெஞ்சே, நீஎன்றும்
காழ்த்து உபதேசம் தரினும் கைகொள்ளாய்
, கண்ணன்தாள்
வாழ்த்துவதே கண்டாய் வழக்கு
.

நெஞ்சே,

எம்பிரானை வணங்கு என்று நான் உனக்கு உபதேசம் சொன்னாலும், நீ கோபித்து அதைப் பின்பற்றுவதில்லை, என்னை ஆழமான துயரில் விழவைக்கவேண்டும் என்று மேலும் மேலும் முயற்சி செய்கிறாய்,

(நெஞ்சு அதனை மறுத்துப் பேசுகிறது)

அது போகட்டும், நாம் இருவரும் இப்படி மாறி மாறிப் பேசி என்ன பயன்? நிறைவாக ஒன்றைச் சொல்கிறேன், கேள், நாம் கண்ணனின் திருவடிகளை வணங்கி வாழ்த்துவதே சரி, (அதுவே நாம் உய்யும் வழி.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT