நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 10

நம்மைச் சார்ந்திருக்கும் இரண்டு வல்வினைகளும்

செ.குளோரியான்

சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து, மாயப் பற்றுஅறுத்துத்
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்,
ஆர்ந்த ஞானச்சுடர்ஆகி அகலம்,கீழ்,மேல்,அளவுஇறந்து
நேர்ந்த உருவாய், அருஆகும் இவற்றின் உயிராம்
                                                                                        நெடுமாலே.

இறைவன் அருள்செய்தால், நம்மைச் சார்ந்திருக்கும் இரண்டு வல்வினைகளும் சரியும், மாயையான உலகப் பொருள்களின் மீது நாம் வைத்திருக்கும் பற்று அறுபட்டுத் தீரும், அவன் மீது நாம் மனத்தைச் செலுத்தும்படி அவனே நம்மைத் திருத்துவான், அதன்பிறகு, நமக்கு வீடுபேறு வழங்குவதற்காக அந்த வீட்டை(மோட்சவுலகத்தை)த் திருத்துவான் (அழகுபடுத்துவான்).

அந்தப் பெருமான், நிறைந்த ஞானச்சுடர், அகலம், கீழ், மேல் என்கிற அளவுகளெல்லாம் அவனுக்கில்லை, எல்லையற்றுப் பரந்துவிரிந்தவன், அதேசமயம், நுட்பப்பொருளாகவும் திகழ்கிறவன், உருவும் அருவும் அவனே, எல்லாவற்றுக்கும் உயிர் அவனே, அந்த நெடுமாலை வணங்குவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT