நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11

வானத்தின் குணமான சத்தம்

செ.குளோரியான்

கர விசும்பு, எரி, வளி, நீர், நிலம், இவைமிசை
வரன் நவில், திறல், வலி, அளி, பொறையாய் நின்ற
பரன்அடிமேல் குருகூர்ச் சடகோபன்சொல்
நிரல்நிறை ஆயிரத்து இவைபத்தும் வீடே.

திடமான வானம், நெருப்பு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றிலே அவற்றின் சிறந்த தன்மைகளாக நிற்கிறவன் பரம்பொருளாகிய பெருமான்,

அதாவது, வானத்தின் குணமான சத்தம், நெருப்பின் குணமான எரிக்கும் திறன், காற்றின் குணமான வலிமை, நீரின் குணமான குளிர்ச்சி, நிலத்தின் குணமான பொறுமை ஆகிய ஐந்தாகவும் பெருமான் நிற்கிறான்,

அப்படிப்பட்ட பெருமானின் திருவடிகளை வணங்கிக் குருகூர்ச் சடகோபன் முறைப்படி சொன்ன ஆயிரம் பாடல்களிலே, இந்தப் பத்தும் மோட்சத்தை அளிக்கக்கூடியவை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT