நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 2

சிவந்த தாமரையைப் போன்ற கண்களைக் கொண்டவன்,

செ.குளோரியான்

என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீர்அலிரே!
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ் குற்றேவல்
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதி இனமே?

குயில்கூட்டங்களே,

நீங்கள் என்னோடு நெடுநாள் பழகியவர்கள், எனக்காக ஓர் உதவி செய்யமாட்டீர்களா?

என்னுடைய பெருமான், சிவந்த தாமரையைப் போன்ற கண்களைக்கொண்டவன், அவனிடம் என் சார்பாகத் தூது செல்லுங்கள், என் நிலைமையைச் சொல்லுங்கள், அதனால் உங்களுக்கு என்ன குறை வந்துவிடும்?

நான் எப்போதோ செய்த வினையாலே அவனது திருவடியின் கீழ் குற்றேவல் செய்ய முயலாமல் இருந்துவிட்டேன். இனியும் அவனைவிட்டு நான் விலகியிருக்கலாமா? அது முறையா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT