நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

மோட்சத்தை நாடிச் சென்று

செ.குளோரியான்

புணர்க்கும் அயன்ஆம், அழிக்கும் அரன்ஆம்,
புணர்த்ததன் உந்தியோடு ஆகத்து மன்னி,
புணர்த்த திருஆகித் தன் மார்வில், தான் சேர்
புணர்ப்பன் பெரும்புணர்ப்பு எங்கும் புலனே.

அனைத்தையும் படைக்கிற பிரம்மனை, எம்பெருமான் தன்னுடைய தொப்புளில் படைத்தான், அனைத்தையும் அழிக்கின்ற சிவனை, தன் உடலில் ஒரு பகுதியாகச் சேர்த்தான், திருமகளைத் தன் மார்பில் சேர்த்துக்கொண்டான், தனக்கு ஏற்ற, உயர்ந்த செயல்களைச் செய்கிற அந்தப் பெருமானின் அற்புதச்செயல்களை நாம் எங்கும் காணலாம்.

•••

பாடல் 4

புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலன் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்,
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஓவாதே.

ஐந்து புலன்களிலே மேய்கிற ஐந்து பொறிகளின் ஆதிக்கத்திற்கு உட்படாமல், நலம் குறையாத மோட்சத்தை நாடிச் சென்று அங்கே புகுகிறவர்களே, அசுரர்கள் தடுமாறி வீழும்படி அவர்களை வென்றவன், எம்பெருமான், அவனுடைய பலம் நிறைந்த சிறப்புகளில் ஓயாமல் மூழ்கித் திளையுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT