நாள்தோறும் நம்மாழ்வார்

ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

நெஞ்சால் தியானித்து

செ.குளோரியான்

பாடல் - 11

தெரிதல், நினைதல், எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச்சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்டர் ஆக்கும் உலகம் உண்டாற்கே.

யாராலும் உண்மையாக அறிய இயலாத, தெளிவாகப் புரிந்துகொள்ள இயலாத, நெஞ்சால் தியானித்து எண்ண இயலாத பெருமையையுடையவன் எம்பெருமான், அந்தத் திருமாலின் தொண்டர்களுடைய தொண்டர்களுடைய தொண்டன் சடகோபன். அந்தச் சடகோபன் உணர்ந்து சொன்ன ஆயிரம் பாடல்களிலே இந்தப் பத்தையும் பாடியவர்கள், உலகை உண்ட அந்தப் பெருமானின் தொண்டர்களாக ஆவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT