திண்ணன் வீடுமுதல் முழுதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்,
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்டநம்
கண்ணன் கண்அல்லது இல்லை ஓர்கண்ணே.
உறுதியான பரமபதம் தொடங்கி அனைத்து உலகங்களும் அவனே, எல்லையில்லாத நற்குணங்களைக் கொண்டவன் / நம் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவன் அவன், எம்பெருமான்,
மண்ணும் விண்ணும் மொத்தமாக உண்ட அந்தப் பெருமான், நம் கண்ணன், அவனையன்றி நமக்கு வேறு யார்தான் தலைவன்? (வேறு யாருமில்லை!)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.