நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

சிறந்த சொல்வன்மையோடு

செ.குளோரியான்

பாடல் - 11

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண்குருகூர்ச் சடகோபன்
சொல்வினையால் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலன் இடை வைகுந்தம் நண்ணித்
தொல்வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.

கொடிய வினைகளைத் தீர்க்கிறவன் கண்ணன், அக்கண்ணனைப் பற்றி, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களைச் சிறந்த சொல்வன்மையோடு பாடியிருக்கிறார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் நல்வினையாக எண்ணிக் கற்பவர்கள் நன்மையுடைய பரமபதத்துக்குச் செல்வார்கள், அவர்களுடைய பழைய வினைகள் அனைத்தும் தீரும், மற்றவர்கள் அவர்களைத் தொழுது வணங்கும்படி வீற்றிருப்பார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

SCROLL FOR NEXT