பாடல் - 11
மாரி மாறாத தண்அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே.
மழை என்றைக்கும் பெய்கிற குளிர்ச்சியான மலை திருவேங்கடம், அங்கே எழுந்தருளியிருக்கும் அண்ணல் எம்பெருமான், வருவாய் என்றைக்கும் நிறைகிற பசுமையான பூம்பொழில்களால் சூழப்பட்ட குருகூர் நகர்க் காரிமாறன் சடகோபன் அப்பெருமானை ஆயிரம் பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களைச் சொல்லும் பக்தர்களுடைய வினைகளெல்லாம் தீரும், என்றைக்கும் நறுமணம் கமழ்கிற தாமரைமேல் வீற்றிருக்கும் திருமகள் அவ்வினைகளைத் தீர்த்துவைப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.