நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 5

ஞானங்களால்கூடப் புரிந்துகொள்ள

செ.குளோரியான்

இனி யார் ஞானங்களால் எடுக்கல் எழாத எந்தாய்,
கனிவார் வீட்டுஇன்பமே, என் கடல்படா அமுதே,
தனியேன் வாழ்முதலே, பொழில்ஏழும் ஏனம்ஒன்றாய்
நுனிஆர் கோட்டில் வைத்தாய், நுனபாதம் சேர்ந்தேனே.

ஞானங்களால்கூடப் புரிந்துகொள்ள இயலாத அரிய தன்மையைக் கொண்டவனே, எங்கள் தந்தையே, எம்பெருமானே, பக்தியால் கனிந்தவர்களுக்கு மோட்சத்தைப் போன்ற சுகம் தருபவனே, உப்புக்கடலிலே உருவாகாத அமுதமே, தனிமையிலுள்ள என்னுடைய வாழ்க்கைக்கு முதற்காரணமானவனே, வராக அவதாரமெடுத்து ஏழு உலகங்களையும் கூரான கொம்பிலே தூக்கியவனே, நான் உன் திருவடிகளைச் சரணடைகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்!

SCROLL FOR NEXT