நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 10

அவனைக் கண்களால் காண இயலாது

செ.குளோரியான்

ஆண்அல்லன், பெண்அல்லன், அல்லா அலியும் அல்லன்,
காணலும்ஆகான், உளன்அல்லன், இல்லைஅல்லன்,
பேணும்கால் பேணும் உருஆகும், அல்லனும்ஆம்,
கோணை பெரிதுஉடைத்து எம்பெருமானைக் கூறுதலே.

எம்பெருமான் ஆண் அல்லன், பெண் அல்லன், இவை இரண்டும் அல்லாத அலியும் அல்லன்.

அவனைக் கண்களால் காண இயலாது, அவன் உள்ளவனும் அல்லன், இல்லாதவனும் அல்லன்.

பக்தர்கள் அவனை விரும்பினால், அவர்கள் விரும்பும் உருவத்தில் தோன்றுவான், அவ்வாறில்லாமல் வேறுவிதமாகவும் அமைவான்.

இத்தகைய பெருமானைப் பற்றி எப்படிப்பேசுவது? இது சிரமமான செயலே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT