நாள்தோறும் நம்மாழ்வார்

மூன்றாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

பல தலைமுறைகளை அடுக்கினாலும் சரி

செ.குளோரியான்

ஒழிவுஇல் காலம்எல்லாம் உடனாய் மன்னி
வழுஇலா அடிமைசெய்யவேண்டும் நாம்,
தெழிகுரல் அருவித் திருவேங்கடத்து
எழில்கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.

சத்தமிடும் அருவிகளைக்கொண்ட திருவேங்கட மலையிலே எழுந்தருளியிருக்கும் எம்பிரான், அழகு நிறைந்த சோதிவடிவான இறைவன், நம் தந்தையின் தந்தைக்கும் தந்தையானவன், அத்தகைய பெருமானுக்கு, இனிவரும் காலமெல்லாம் நாம் ஓய்வின்றிப் பணி செய்ய வேண்டும், அவனுடனே இருந்து குற்றமில்லாத அடிமைத்தொழிலை நிறைவேற்ற வேண்டும். (பலவகைகளிலும் பணிவிடை செய்ய வேண்டும்.)

•••

பாடல் - 2

எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும்
முந்தை, வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து
அந்தம்இல் புகழ்க் கார் எழில் அண்ணலே.

நம் தந்தை, அவருடைய தந்தை எனப் பல தலைமுறைகளை அடுக்கினாலும் சரி, அதற்கெல்லாம் முன்பாகத் திகழும் தந்தை, எம்பெருமான், எங்கள் குலதெய்வம், தேவர்கள் தங்கள் தலைவனோடு வந்து மலர் தூவி வழிபட்டு மகிழ்கிற திருவேங்கட மலையில் எழுந்தருளியிருக்கிறவன், முடிவில்லாத புகழைக் கொண்டவன், கார்மேகவண்ணன், அழகன், எங்கள் அண்ணல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT