எழுமைக்கும் எனது ஆவிக்கு இன் அமுதத்தினை,
எனது ஆர்உயிர்
கெழுமிய கதிர்ச்சோதியை, மணி
வண்ணனை, குடக்கூத்தனை,
விழுமிய அமரர், முனிவர் விழுங்கும்
கன்னற்கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய், இறையும்
நில்லா துயரங்களே.
எப்பொழுதும் என்னுடைய உயிருக்கு இனிய அமுதமானவனை, என்னுடைய உயிரோடு கலந்த கதிர்ச்சோதியை, மணிவண்ணனை, குடக்கூத்து ஆடியவனை, சிறந்த தேவர்கள், முனிவர்கள் விழுங்கும் கரும்பை, இனிப்புப்பழத்தைத் தூய மனத்தோடு தொழுதுவாருங்கள், துயரங்கள் உங்களருகே சிறிதும் நிற்காது.
***
பாடல் - 8
துயரமே தரு துன்ப, இன்ப
வினைகளாய், அவை அல்லனாய்,
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு
ஏழும் உண்டு, உமிழ்ந்தான்தனை,
அயரவாங்கும் நமன் தமர்க்கு அரு
நஞ்சினை, அச்சுதன்தனை,
தயரதற்கு மகன்தனை அன்றி
மற்று இலேன் தஞ்சம்ஆகவே.
துயரம் தரும் துன்ப, இன்ப வினைகளை மக்களுக்கு நியமிக்கிறவன், அதேசமயம் தான் அவற்றுக்கு ஆட்படாமலிருப்பவன், உயர நின்ற ஒரு சோதிவடிவானவன், உலகங்கள் ஏழையும் உண்டு, உமிழ்ந்தவன், அடியவர்கள் மயங்கும்படி அவர்களுடைய உயிரை வாங்கும் எமதூதர்களுக்கு அரிய நஞ்சாகத் திகழ்கிறவன், அச்சுதன், தயரதன் மகன், எம்பெருமான், அப்பெருமானையன்றி வேறு யாரும் எனக்குத் தஞ்சமில்லை. அவனே என் தெய்வம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.