பாடல் 11
தெருளும் மருளும் மாய்த்துத் தன்
திருந்து செம்பொன் கழல் அடிக்கீழ்
அருளி இருத்தும் அம்மானாம்
அயனாம் சிவனாம் திருமாலால்
அருளப்பட்ட சடகோபன்
ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
அருளி அடிக்கீழ் இருத்தும் நம்
அண்ணல் கருமாணிக்கமே.
ஞானம், அஞ்ஞானம் ஆகியவை மாறி மாறி வருகிற நிலையைக் கெடுத்துப் பக்தர்களைத் தன்னுடைய அழகிய, செம்பொன் திருவடிகளின்கீழ் அமர்த்துகின்ற அம்மான், பிரம்மனாகவும் சிவனாகவும் திகழ்கிற திருமாலின் அருளைப்பெற்ற சடகோபர் ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாட வல்லவர்களுக்கு நம் அண்ணலாகிய கருமாணிக்கம் அருள்செய்வார், தன்னுடைய திருவடிகளின்கீழ் இருத்துவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.