நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

மூன்று உலகங்கள்

செ.குளோரியான்


பாடல் 11

நல்ல கோட்பாட்டு உலகங்கள்
மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை
அம் தண் குருகூர்ச் சடகோபன்
சொல்லப்பட்ட ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வர்
கொண்ட பெண்டிர், மக்களே.

இறைவனின் அடியவர்களுக்குத் தொண்டுசெய்யவேண்டும் என்கிற நல்ல கொள்கையைக்கொண்டவை மூன்று உலகங்கள். அந்த மூன்று உலகங்களுக்குள்ளும் நிறைந்த எம்பெருமான், தாமரைக் கண்ணனை அழகிய, குளிர்ந்த குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பாடவல்லவர்கள் மனைவிமார்கள், குழந்தைகளுடன் சிறந்த குடும்ப வாழ்க்கை வாழ்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT