நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 6

முருகனுடைய தந்தையாகிய

செ.குளோரியான்


பாடல் - 6

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதி சேர் அனந்தபுரத்து
அமரர்கோன் அர்ச்சிக்கின்று, அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்,
நமர்களோ, சொல்லக் கேண்மின், நாமும் போய் நணுகவேண்டும்,
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே.

அமரர்கள் என்று சொல்லப்படுகிற எல்லாருக்கும் முதன்மையானவர், முருகனுடைய தந்தையாகிய சிவனின் துன்பத்தைத் துடைத்த கோவிந்தனார், எம்பெருமான், அத்தகைய பெருமான், திருவனந்தபுரத்திலே அருள்புரிகிறார், அங்கே அவருக்கு அர்ச்சனை செய்பவர், அமரர்களின் தலைவரான சேனைமுதலியார், எம்பெருமானுக்கு நெருங்கிய தொண்டுகளைப் புரிகிறவர்கள், விண்ணோர்கள். நம்மவர்களே, சொல்வதைக் கேளுங்கள், நாமும் அந்தத் திருவனந்தபுரத்துக்குச் செல்லவேண்டும், எம்பெருமானுக்குத் தொண்டுபுரியவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT