நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 7

உலகையும் உயிர்களையும்

செ.குளோரியான்


பாடல் - 7

துடைத்த கோவிந்தனாரே உலகு, உயிர், தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி, பாம்பு அணைப் பள்ளிகொண்டான்,
மடைத்தலை வாளை பாயும் வயல் அணி அனந்தபுரம்
கடைத்தலை சீய்க்கப்பெற்றால், கடுவினை களையலாமே.

யுகத்தின் முடிவிலே அனைத்தையும் அழித்த கோவிந்தனார்தான் இந்த உலகையும் உயிர்களையும் தேவர்களையும் பிறவற்றையும் படைத்த எங்கள் பரம மூர்த்தி, ஆதிசேஷனாகிய பாம்பில் பள்ளிகொண்ட பெருமானும் அவரே, அத்தகைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலம், நீர் மடைகளிலே வாளை மீன்கள் பாய்கின்ற வயல்களைக்கொண்ட அழகிய திருவனந்தபுரத்திற்குச் சென்று அவருடைய ஆலயத்தின் வாசலை அடைந்து, அந்தப் புனிதமான வாயிலைச் சுத்தம் செய்து சேவை புரிந்தால், கொடிய வினைகளையெல்லாம் களைந்துவிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT