நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 9

நன்மை தரும்

செ.குளோரியான்


பாடல் - 9

நாம் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியஆன,
சேமம் நன்கு உடைத்து, கண்டீர், செறிபொழில் அனந்தபுரம்,
தூமம் நல் விரை மலர்கள் துவள்அற ஆய்ந்துகொண்டு
வாமனன் அடிக்கு என்று ஏத்த மாய்ந்து அறும் வினைகள் தாமே.

நீங்கள் அறியும்படி நாங்கள் சொன்ன நாட்கள் நெருங்கிவிட்டன. செறிந்த பொழில்களைக்கொண்ட திருவனந்தபுரம்தான் உங்களுக்கு நன்மை தரும், அதனை அறியுங்கள். பூஜைக்கேற்ற தூபம், நல்ல, வாசனை மிகுந்த மலர்கள் போன்றவற்றைக் குற்றமில்லாதபடி ஆராய்ந்து எடுத்துக்கொண்டு அங்கே செல்லுங்கள், வாமனனான எம்பெருமானின் திருவடிகளில் அவற்றைச் சமர்ப்பித்துப் போற்றுங்கள், உங்களுடைய வினைகள் தாமே தொலைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT