நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் - 11

அளவற்ற புகழையுடைய

செ.குளோரியான்


பாடல் - 11

அந்தம்இல் புகழ் அனந்தபுர நகர் ஆதி தன்னைக்
கொந்து அலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய் அமர் உலகில்
பைந்தொடி மடந்தையர்தம் வேய் மரு தோள் இணையே.

அளவற்ற புகழையுடைய திருவனந்தபுரம் நகரிலே அருள்புரிகிறவர், அனைத்துக்கும் முதலாகத் திகழும் எம்பெருமான், அத்தகைய பெருமானை, கொத்தாக மலர்கள் பூக்கிற சோலைகள் நிறைந்த குருகூர் மாறன் ஆயிரம் திருப்பாடல்களில் போற்றினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள் பரமபதத்துக்குச் செல்வார்கள், அங்கே பசிய தொடி(தோள் வளை)யை அணிந்த, மூங்கில்போன்ற தோள்களையுடைய தேவ மாதர் செய்யும் பணிவிடையை ஏற்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT