நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9

திருவடிகளைக் கண்டேன்

செ.குளோரியான்

பாடல் 9

கண்டேன் கமல மலர்ப் பாதம், காண்டதுமே
விண்டே ஒழிந்த வினை ஆயின எல்லாம்,
தொண்டே செய்து என்றும் தொழுது வழி ஒழுக,
பண்டே பரமன் பணித்த பணிவகையே.

எம்பெருமானின் தாமரைத் திருவடிகளைக் கண்டேன், அவ்வாறு கண்டதும் என்னுடைய வினைகள் அனைத்தும் விண்டுபோயின, முன்பு அந்தப் பரமன் எனக்கு வகுத்த முறைப்படி அவருக்கு என்றும் தொண்டுசெய்தேன், அவரைத் தொழுது அவருடைய வழியில் நடந்தேன், (அதனால் அவருடைய திருவடிகளைக் கண்டேன்.)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT