நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 6

எல்லாருக்கும் அன்பன்

செ.குளோரியான்


பாடல் - 6

அன்பன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்,
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்,
நல் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரத்து
அன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே.

தன்னுடைய திருவடிகளை வந்தடைந்தவர்கள் எல்லாருக்கும் அன்பன், சிவந்த பொன்னைப்போன்ற உடலைக்கொண்ட இரணியனின் உடலைப் பிளந்தவன், நல்ல பொன்னாலே அமைக்கப்பட்ட மதிள் சுவரால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் அன்பன், எம்பெருமான், தன்மீது உண்மையான பக்தி செலுத்துகிறவர்களிடம் ஒவ்வொரு நாளும் உண்மையான அன்பு காட்டுவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT