நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 8

பரமபதநாதனின் திருவடிகளைத்

செ.குளோரியான்


பாடல் - 8

அணியன் ஆகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்,
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்,
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திருக்கண்ணபுரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன் பாதமே.

தன்னுடைய திருவடிகளை அடைந்த எல்லாருக்கும் எம்பெருமான் அருகிலேயே இருக்கிறான், நோய்கள் அவர்களை நெருங்கவிடாமல் செய்கிறான், பிறவிச்சுழலைக் கெடுத்து அவர்களை ஆள்கிறான். ஆகவே, மணிகளும் பொன்னும் பொருந்திய மதிள் சுவரால் சூழப்பட்ட திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமபதநாதனின் திருவடிகளைத் தினந்தோறும் பணிந்து வணங்குங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT