நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 3

பிரம்மன், சிவபெருமான்

செ.குளோரியான்


பாடல் 3

அன்றி யாம் ஒரு புகலிடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான்முகன், அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூ உலகு அளித்து உழல்வான் திருமோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே.

பிரம்மன், சிவபெருமான், மற்ற தேவர்களெல்லாம் எம்பெருமானை நாடி வந்து, ‘உங்களையன்றி எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை’ என்று அழைக்கிறார்கள், அதைக் கேட்டு அப்பெருமான் பகைவர்களை வெல்கிறான், மூன்று உலகங்களையும் காத்து அருள்கிறான். அத்தகைய பெருமானுடைய திருமோகூரை இனி நாம் நன்றாக அணுகுவோம், நம்முடைய இடர்களெல்லாம் கெடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT