நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து முதல் திருவாய்மொழி  - பாடல் 4

தேவர்களும் முனிவர்களும்

செ.குளோரியான்

பாடல் 4

இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்திச்
சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடரப்
படர்கொள் பாம்பு அணைப் பள்ளிகொள்வான் திருமோகூர்
இடர் கெட அடி பரவுதும், தொண்டீர், வம்மினே.

தேவர்களும் முனிவர்களும் சுடர்வடிவமான சோதிப்பெருமானாகிய எம்பெருமானைப் போற்றி, ‘எங்களுடைய இடர்கள் கெடுமாறு இங்கே வந்து காப்பாய்’ என்று வணங்குகிறார்கள், அத்தகைய பெருமான், பரவுகின்ற பாம்பாகிய ஆதிசேஷன்மீது திருத்துயில் கொள்கிறவன், அவன் எழுந்தருளியிருக்கும் திருமோகூருக்குச் செல்வோம், அவனுடைய திருவடிகளை வணங்கி நம் இடர்களைப் போக்கிக்கொள்வோம், தொண்டர்களே, வாருங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT